ஜனவரி 2015 க்கான தொகுப்பு




உமாவும் கவிதையும்:–

1

பழுத்த மரமொன்று
அனுப்பத்துவங்கியது
தன் அனுபவங்களை
உதிரும் இலைகளாய்

வேர்தடுக்கிய மரவெட்டி ஒருவன்
அன்னாந்து பார்த்தான்
அதன் ஆயுளை கணக்கிட்டபடி

மொளனமாய் கடக்கும் காற்றோடும்
மாய்ந்து மாய்ந்து பெய்யும் வெயிலோடும்
நிலவில் குளிக்கும் மனநிலைகொண்டு
மரத்து நின்றிருந்தது மரம்

இளைப்பார வந்தாள் சுருங்கிய
கை கொண்ட கிழவி ஒருத்தி
வேரினை அணைத்தபடி
சிலிர்த்து விடுத்தது மரம்
முன்பென்றோ மலர்ந்த மலரின்
கடைசி இதழை
நேசத்தின் துளி விழி நீரென.

Add a comment ஜனவரி 20, 2015

1

Add a comment ஜனவரி 14, 2015

உமாவும் கவிதையும்: நேற்று பட்டம் விட்டவன் பந்தய புறாக்களோடு இருக்கிறான் இன்று நேற்றைய விளையாட்டு நேற்றுடன் முடிந்ததாக இன்று புதிதாக தொடங்கியிருந்தான் அப்படித்தான் நானும் மாறி இருப்பேன் பல்லாங்குழியிலிருந்து பாண்டிக்கு பாண்டியிலிருந்து ஜந்து கல்லுக்கு விளையாட்டுக்கு சேர்த்துக்கொள்ளப்படாதவன் வேண்டுமென்றே மாற்றியதோ சலித்து ஓய்ந்தவன் சட்டென்று மாற்றியதோ எப்படியோ மாற்றிக்கொள்கிறாள் விளையாட்டு தேவதை விதவிதமாய் அவள் விருப்பபடி

2

நேற்று பட்டம் விட்டவன்
பந்தய புறாக்களோடு இருக்கிறான் இன்று
நேற்றைய விளையாட்டு
நேற்றுடன் முடிந்ததாக
இன்று புதிதாக தொடங்கியிருந்தான்
அப்படித்தான் நானும்
மாறி இருப்பேன்
பல்லாங்குழியிலிருந்து பாண்டிக்கு
பாண்டியிலிருந்து
ஜந்து கல்லுக்கு

விளையாட்டுக்கு
சேர்த்துக்கொள்ளப்படாதவன்
வேண்டுமென்றே மாற்றியதோ
சலித்து ஓய்ந்தவன்
சட்டென்று மாற்றியதோ
எப்படியோ மாற்றிக்கொள்கிறாள்
விளையாட்டு தேவதை
விதவிதமாய்
அவள் விருப்பபடி

Add a comment ஜனவரி 14, 2015

பக்கங்கள்

பிரிவுகள்

தொடுப்புகள்

மேல்

நாட்காட்டி

ஜனவரி 2015
தி செ பு விய வெ ஞா
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

Posts by Month

Posts by Category