Posts tagged ‘காதல்..கவிதைகள்..உமா.. ‘




உமாவும் கவிதையும்:–

காதலை கவிதையாக
சொல்லமுடிகிறது
எல்லோரிடமும்
என் கவிதையை காதலாக
சொல்லமுடிகிறது
உன்னிடத்தில்
மட்டும்

Add a comment ஏப்ரல் 4, 2014

உமாவும் கவிதையும்:–

1

என் கணத்த
மெளனத்தை
என்னவென்று
பொருள்கொள்வாய் நீ

வலியின்
ஆழமென்றா
ரணத்தின்
நீளமென்றா
விரக்தியின்
உச்சமென்றா

நிராசைகள் அவை
வழக்கம்போல் உணர்வாய்
என் திமிரின்
பெரு உருவம் என்று

Add a comment மார்ச் 14, 2014

உமாவும் கவிதையும்:–

1
புதிய வீதிகளாம்
வீடுகளாம்
சாலைகளாம்
திரும்ப பார்க்கிறது
பழைய நிலைக்கு

அறுத்த மனிதர்களை
நட்ட பார்க்கிறது
சிங்கள மரங்களால்
நடட்டும்
நடக்கட்டும்

அச்சம் கொள்ளுங்கள்
அரித்து போகலாம்
நீங்கள் புதைத்த
ஆத்ம வீரியத்தால்
Photo
Photo

Add a comment ஜனவரி 24, 2014

உமாவும் கவிதையும்:–

4
நாட்பில் நான்
விருப்பமுற்றவள்
என்பதையும்
காதல் எனில்
விலகி நிறபவள்
என்பதையும்
அறியாமல்
சொல்லிச்செல்கிறாய்
நட்பை சொல்லவந்த இடத்தில்
காதலை

உன் அறியாமைக்கு
அகப்படாமல்
நழுவுகிறது
நட்பும்
Photo:

Add a comment ஜனவரி 24, 2014

உமாவும் கவிதையும்

உனை வெறுக்கத்தொடங்கிய
நிமிடங்களைப்போல
உனை மறக்கத்தொடங்காத
நிமிடங்களும் உண்மை
ஒரு கதாநாயகனைப்போல
கருத்தரித்து நான் வைத்திருந்த
உன் குணங்கள் நிஜத்தில்
உனக்குள் சூல்கொள்ளவே இல்லை
எனும்போது
வயிற்றிலடித்து அழுகிறேன்
காந்தாரியாய்

எம்முனிவனிடமும் மண்டியிட்டு
உனக்கு நல் குணங்கள்
பெற்றுத்தர விருப்பமற்று
உன்னையே மறுத்து
கண்கட்டிக்கொள்கிறேன்
நானும் அவளைப்போல்

மூடிய விழிகளுள்
திறந்த மனது
மறுக்கிறது
மறப்பதற்க்கு மட்டும்
ராணியல்லவே
நான் என்று

Add a comment நவம்பர் 15, 2013

உமாவும் கவிதையும்:

உன் பெயர்
கொண்ட குழந்தைகள்
உன் பெயர்
மாப்பிள்ளைக்கு கொண்ட
திருமண அழைப்பிதழ்
உன் பெயர் கொண்ட
தேனீர் கூடங்கள்
இதிலொன்றில்
இளைப்பாறும் நிமிடத்தில்
அனுமதியற்று
இதழ் கோடியில் துளிரும்
என் வெட்கப்புன்னகை சொல்கிறது
எங்கோ ஒரு மூலைகையில்
எனக்குள்ளே நீ இறவாமல்
இருக்கிறாய் என்று
Photo:

Add a comment நவம்பர் 14, 2013

உமாவும் கவிதையும்:–

1

ஒரு நெடுந்துயரத்தில்
நிழலென பயணிக்கிறேன்
சருகென உதிரும்
நினிவுகளைச்சுமந்தபடி

துளிர்க்கும் தளிரின்
நுனியென மெல்லச்சிரித்து
தொலைகிறேன் அடர்காட்டில்

சுனைகளில் சுரக்கும் நீர்த்துளி
இயல்பாய் வைத்திருக்கிறது
ஈரமென இதயத்தை

மகரந்த மணம் மட்டும்
மறுபடி மறுபடி
ஞாபகப்படுத்துகிறது உனை

அகப்படும் பொழுதில்
சுட்டுத்தொலைக்கத்துணிந்த
சூரியன் அறிந்திருப்பான்
வெடித்துச்சிதற விண்மினி அல்ல
நான் வெண்ணிலா என்று

பழுத்த வலியய்
பழுத்த இலையில் வைத்தேன்
அது பாடிச்சொன்னது
பயணமெங்கும்
என் பரிதவிப்பை

வனமெங்கும் ரீங்காரம்
அதனால் விடுதையற்று
வசிக்கிறேன் மலரடியில்
வசமாய் வாசமாய்

Add a comment ஓகஸ்ட் 23, 2013

உமாவும் கவிதையும்:–

1

ஒரு தேவனைப்போலவே
தரிசிக்கிறேன் உன்னை
உன் உருவம் தொலைத்து
ஆன்மாவை மட்டும் அடைத்தேன்
என் அடைக்கலப்பெட்டியில்

உயிரை இழக்கும்
ஒரு நொடி வலியிலும்
உலகை வெல்லும்
ஒரு நொடி மகிழ்விலும்
உன் மடி தவிர
வேறெங்கும் வீழ்ந்ததில்லை
என் உப்புக்கரித்த கண்ணீர்

வணங்கும் தெய்வத்திலும்
வாழ்த்தும் உள்ளத்திலும்
நீயே இருப்பதாய் நிறைகிறேன்

என் உணவு உனக்கும்
என் உடை உனக்கும்
என் ரசிப்பு உனக்கும்
என் ரணம் உனக்கும்
யாதென நினைத்து
நீ எனைக்கேட்பாய்
நானெனப்படுவது
நீயென ஆனதால்

Add a comment ஜூன் 29, 2013

உமாவும் கவிதையும்:–

1

என் சிறகினைத்தொலைத்து விட்டுத்தான்
உன்னை தேடுகிறேன் என்பதை
அறிவாய் தானே நீ
பறித்தவன் நீ என்பதால்தான்
பதறாமல் உன்னிடமே
வேண்டிக்கிடக்கிறேன்

அவ்வப்போது தருவதாய்
வரும் வார்த்தைகளால்
இறகுகளை விறித்துப்பார்க்கிறேன்
சிறகென நினைத்து

மறுபடி மறுபடி
மாற்றம் கொண்டு நீ
மறுதலிக்கும் பொழுதெல்லாம்
மனதிற்க்குள் இருகிக்கொள்கிறேன்
குருவியாக வேண்டாம் கோழியாகவே
இருக்கிறேன் என்று

விழியால் நனையும் எனை
அலகால் துடைக்குபோதெல்லாம்
நினைக்கிறேன் ஒருபொழுது
வாய்க்கும் ஞாபக்கப்படுத்த உனக்கு
நீ சுழன்றுகொண்டிருக்கும் வானத்தைதான்
நான் தொலைத்துக்கொண்டிருக்கிறேன் என்பதை

Add a comment ஜூன் 26, 2013

உமாவும் கவிதையும்:–

1

கதிர்கள் சுருங்கிய காலைபொழுதில்
கனவில் வந்து அமர்கின்றாய்
முறைத்துப்பார்க்கும் என்னை விலக்கி
விரல்கள் கோர்த்தாய் கூந்தல் சிடுக்கில்
உதிர மலர்கள் இல்லை எனினும்
எடுக்கிறாய் கோக்கிறாய்
சிதறிய வெட்க்கத்தை
விறித்த கார்குழளால்
குறுங்கதிரும் மறைத்தாய்
இரவோ என்று நான் நிலவாய் ஆனானேன்
திடுக்கென விழித்தேன் ஒற்றை குயில் அழைத்தலில்
விடிந்த வெகு நேரத்தில்
சோ வென மழை…வெளியேயும்.

Add a comment ஜூன் 25, 2013

பக்கங்கள்

பிரிவுகள்

தொடுப்புகள்

மேல்

நாட்காட்டி

மே 2024
தி செ பு விய வெ ஞா
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Posts by Month

Posts by Category